Last Updated:
விபூதி காண்ட் நகரில், நெரிசல் மிகுந்த சாலையில் பெண் ஒருவர் விசித்திரமாக உடற்பயிற்சி செய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். போலீசார் அவரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெரிசல் மிகுந்த லக்னோ சாலையில் அமர்ந்து, பெண் ஒருவர் விசித்திரமாக தலையை ஆட்டி, உடற்பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் விபூதி காண்ட் நகரில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தலையை விரித்துபோட்டு விசித்திரமாக நடந்துக் கொண்டார். இதனால் அந்த வழியாக சென்ற மக்கள் அச்சம் அடைந்தனர். திடீரென ஆபத்தான முறையில் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்.
#Lucknow में बीच सड़क पर महिला का ड्रामा
विभूति खंड इलाके में देर रात महिला ने किया रहस्यमयी हंगामाबीच सड़क बैठकर 20 मिनट तक करती रही अजीबोगरीब हरकतें
सोशल मीडिया पर वीडियो वायरल,महिला को सड़क से हटाया
प्रत्यक्षदर्शियों का दावा महिला की हरकतें सामान्य नहीं थी@lkopolice |… pic.twitter.com/FhQrMfHGJr
— News1India (@News1IndiaTweet) March 20, 2025
நெரிசல் மிகுந்த சாலை என்பதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை சாலையில் இருந்து அப்புறப்படுத்த காவலர்கள், அவரது பின்புலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Lucknow,Uttar Pradesh
March 20, 2025 4:42 PM IST
நடுரோட்டில் உட்கார்ந்து தலைமுடியை விரித்து போட்டு பெண் செய்த விசித்திர செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

