சிங்கப்பூர் என்ற சிறிய நாடு உலக வரைபடத்தில் தனக்கென ஒரு வலிமையான இடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது People’s Action Party (PAP) என்ற ஒரு கட்சியின் நீடித்த, நிலையான ஆட்சி. 1959 முதல் 2025 வரை, PAP ஒரு முறையும் தோல்வியறியாமல் 15 முறையும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. தற்போது நடந்த தேர்தலிலும் கூட 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று சாதனைப் புரிந்திருக்கிறது.

People’s Action Party (PAP)
PAP (People’s Action Party) கட்சி 1954 ஜூன் 21 அன்று சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. லீ குவான் யூ (Lee Kuan Yew), டி.கே. ராஜரத்னம், கோ செங் ஸ்வீ, சிதம்பரம் சித்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களால் “கம்யூனிச எதிர்ப்பு மற்றும் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு’ என்ற இயக்கமாகத் தொடங்கப்பட்டது.
1959-ம் ஆண்டு சிங்கப்பூர் பூரண சுயாட்சி பெற்றதும், முதலாவது சட்டமன்றத் தேர்தலில் PAP கட்சி களமிறங்கியது. அப்போதே 51 இடங்களில் 43 இடங்களில் வென்று, லீ குவான் யூ முதலமைச்சராகப் பதவியேற்றார்.
