சித்தார்த் – 40 படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கபட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் – 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், கடும் விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக, சித்தார்த் நடிப்பில் ‘மிஸ் யூ’ என்கிற படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
