மேலும், மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நாளை(ஜூன் 3) நடைபெறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா இருவரும் இணைந்து கேக் வெட்டினர். கேக்கை ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஊட்டிய நெஸ் வாதியா வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைக் கண்டு ஒருவிதமான முகச் சுழிப்புடன் ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர் அங்கிருந்து நகர்ந்தார். இதற்கான விடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
