Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“காங்கிரஸ் நக்சலைட்களால் இயக்கப்படுகிறது..!” மீண்டும் தேர்தல் உக்தியை தொடங்கிய பிரதமர் மோடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2024
in அரசியல் செய்திகள்
1
“காங்கிரஸ் நக்சலைட்களால் இயக்கப்படுகிறது..!” மீண்டும் தேர்தல் உக்தியை தொடங்கிய பிரதமர் மோடி..
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இப்போதே தொடங்கிவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் விஷ்வகர்மா யோஜனா திட்டத்தின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், “‘காங்கிரஸ் கட்சி நகர நக்சலைட்களால் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் ஒரு துண்டாடும் கும்பல், இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. ஊழல் அரச குடும்பத்தால் நடத்தப்படும் மிகவும் அதிக ஊழல் நிறைந்தது காங்கிரஸ் கட்சி. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விநாயகர் பூஜையை வெறுக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நான் சென்றதைக்கூட காங்கிரஸ் எதிர்க்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்களை கைதுசெய்தனர். விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டது. சுதந்திர போராட்டத்தின்போது லோக்மான்ய திலகர் கூட்டத்தை கூட்டுவதற்காக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார். அந்த பாரம்பர்யத்தை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடப்பார்க்கிறது. மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக்கொண்டிருந்த போது, கர்நாடகாவில் விநாயகர் சிலைகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த நாடே காயம் அடைந்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமைதி காக்கின்றன. இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராகப் பேசி இந்தியாவின் பாரம்பர்ய கலாசாரத்திற்கு சிலர் (ராகுல் காந்தி) களங்கம் விளைவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் முந்தைய மகாவிகாஷ் அகாடி அரசு விவசாயிகளை கடனில் தள்ளிவிட்டது” என்று குற்றம்சாட்டினார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

.

Previous Post

`விஜயைப் பார்த்து திமுக பயப்படுகிறது!’ – EPS-ஐ மீண்டும் முதல்வராக்கும் பூஜையில் மாஃபா…

Next Post

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பிரதமர் மோடி அவர்களே அதிகாரம் ஆட்சி உங்கள் கையில் தானே இருக்கிறது அப்புறம் என்ன சரியான ஆதாரங்களை திரட்டி கொண்டு அதன் அடிப்படையில் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அல்லது இப்படி சொல்லி காங்கிரசை மிரட்டி ஏதாவது பெரிய அளவில் பணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றீர்களா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In