Last Updated:
நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமான அளவில், டெல்லியின் பல்வேறு பகுதியிலுள்ள காற்றின் தரக்குறியீடு உள்ளது.
குளிர்காலம் நிலவி வரும் சூழலில், தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசைக் குறைப்பதற்காக 4ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையிலும், காற்றின் மாசு குறையவில்லை என டெல்லி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Delhi/NCR’s AQI has breached the catastrophic 500 mark, triggering GRAP-4: only 50% staff will attend offices physically, and all classes shift to hybrid mode. The air is toxic and unbreathable. God help us all. 😮💨 pic.twitter.com/VwjJ1JEY1d
— Om (@RajputInReebok) December 15, 2025
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பனி மூட்டமும் டெல்லியை ஆட்டிப்படைக்கிறது. இதன் காரணமாக, 75க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோன்று, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.
Bengaluru Wakes Up to a Dense Blanket of Fog, Offering a Mesmerizing Hill-Station Winter Vibe
The morning view from Bengaluru was covered in dense fog, making the entire city look as though it had been wrapped in a thick blanket of mist. The visibility was low, and buildings,… pic.twitter.com/NDdvScXzYW— Karnataka Portfolio (@karnatakaportf) December 15, 2025
இந்தக் காட்சிகள் யாவும், அங்குள்ள மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
December 15, 2025 1:40 PM IST

