Last Updated:
ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் மாணவிகளுடன் அத்துமீறி விளையாடிய தலைமையாசிரியர் வெங்கடபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளுடன் அத்துமீறி விளையாடிய தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக வெங்கடபதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தப்பள்ளியில் நேற்று ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, மாணவிகள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற தலைமை ஆசிரியர் வெங்கடபதி கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்டு இருக்கிறார். இதனை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இந்த காட்சியை அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மேலும் புட்டபர்த்தி காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் வெங்கடபதி மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தலைமை ஆசிரியர் வெங்கடபதியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளியில் கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் பள்ளி தலைமை ஆசிரியரே அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
March 17, 2025 2:34 PM IST
ஹோலி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி.. மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தலைமையாசிரியர் கைது – ஆந்திராவில் அதிர்ச்சி!

