Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹரியானா டூ புதுச்சேரி.. மோசடி கும்பல் குறித்து அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2025
in அரசியல் செய்திகள்
0
ஹரியானா டூ புதுச்சேரி.. மோசடி கும்பல் குறித்து அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 3:31 PM IST

புதுச்சேரி போலீசார் ஹரியானாவை சேர்ந்த பர்வீன், கவுரவ் ஆகியோரை கைது செய்தனர்.

News18News18
News18

ஹரியானாவை சேர்ந்த மோசடி கும்பல் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைக்காக பல இணையத்தளங்களில் பதிவு செய்திருந்தார். அவரது மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசிய மர்ம நபர் ஒருவர், தன்னை எச்.ஆர். என கூறி அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், பிரபல ஐடி நிறுவனத்தில் பணி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும் அந்த வேலைக்கு அதிக டிமாண்டு இருப்பதாகவும், ஆனால் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் கண்டிப்பாக தங்களுக்கு அந்த வேலையை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதை உண்மை என நம்பிய சிவனேஷ், வேலைக்காக பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார். தேர்வுக் கட்டணம், செயலாக்க கட்டணம் என பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை மர்ம நபரிடம் அவர் இழந்துள்ளார். பணத்தை வாங்கியதும் சிவனேஷின் எண்ணை ப்ளாக் லிஸ்டில் போட்ட மர்ம நபர் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தார். பணம் வாங்கி நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால் கடும் விரக்தி அடைந்த சிவனேஷ் அதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், மர்ம நபருக்கு பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர். அது ஹரியானாவில் உள்ள பரிதாபாத் பகுதியில் வசிக்கும் பர்வீன், கவுரவ் ஆகியோருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஹரியானா விரைந்த போலீசார் பர்வீன், கவுரவ் இருவரையும் புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தன.

பிடிபட்டவர்களிடம் நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகள் இருப்பதும், வேலைவாய்ப்பு மோசடி செய்யும் கால் சென்டரில் வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவிட் காலத்தில் கவுரவ் தனது நண்பர் சந்தீப்புடன் சேர்ந்து சொந்தமாகப் போலி கால் சென்டர் வைத்து வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்ற தொடங்கி உள்ளனர். அவர்களின் வலையில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் பல கோடி மோசடி செய்துள்ளனர். அது தொடர்பாக பல மாநிலங்களில் புகார்களும் பதிவாகி உள்ளன. ஆனால் அவர்கள் போலீசார் கையில் மட்டும் பிடிபடாமல் தப்பித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கு: முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகர் ஸ்ரீநாத் பாசி!

இதனிடையே முதல் முறையாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் தற்போது பர்வீன், கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சந்திப் தலைமறைவாகியுள்ளார். இதில் கைதான இருவரும் பட்டதாரிகள். அதில் ஒருவர் பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. போலி கால்சென்டர் நடத்தி 4 ஆண்டுகளாய் பல மாநில இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் போலீசில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Location :

Puducherry (Pondicherry)

First Published :

April 08, 2025 3:31 PM IST



.

Previous Post

ADMK-BJP alliance: ’புத்தி இருக்கவன் இதை பண்ணுவானா? இனி அவ்ளோதான்!’ ஈபிஎஸ் முடிவை சாடும் எஸ்.பி.லட்சுமணன்!

Next Post

உ.பி.: பசு கடத்தல்காரர்கள் இருவர் சுட்டுப் பிடிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உ.பி.: பசு கடத்தல்காரர்கள் இருவர் சுட்டுப் பிடிப்பு

உ.பி.: பசு கடத்தல்காரர்கள் இருவர் சுட்டுப் பிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In