Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாயை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்த மகள்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2025
in அரசியல் செய்திகள்
0
தாயை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்த மகள்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 25, 2025 4:31 PM IST

தெலங்கானாவில், 16 வயது மகள் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாயை கொன்ற மகள்தாயை கொன்ற மகள்
தாயை கொன்ற மகள்

தெலங்கானா மாநிலத்தில் காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து மகளே அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஜீடி மெட்டலா பகுதியில் 34 வயது அஞ்சலி தன்னுடைய 16 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நலகொண்டாவை சேர்ந்த சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தனர். மகளுடைய காதலை அறிந்த அஞ்சலி பத்தாம் வகுப்பு படிக்கும்போதே காதலா? எனக் தட்டிக் கேட்டு மகளை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அஞ்சலியின் மகள் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து எங்கோ சென்றுவிட்டார். மகளை காணவில்லை என்று அஞ்சலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருந்த நிலையில் காதலனுடன் அந்த சிறுமி வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் தலையிட்ட போலீசார், அந்த பெண் மைனர் என்பதால் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது எனக் கூறி இருவரையும் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதைக் கேட்டு நல்ல பிள்ளை போல் வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுமி, அதன்பின்னர் தான் தனது கோரமான மறுபக்கத்தை காட்டியிருக்கிறார். காதலை பிரிக்க நினைத்த தாயை தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அந்த சிறுமி. அதற்காக தனது காதலன் சிவாவுடன் சேர்ந்து திட்டம் ஒன்றையும் தீட்டியிருக்கிறார்.

அதன்படி சம்பவத்தன்று காதலன் சிவா, அவரது சகோதரன் யஸ்வந்த் ஆகியோர் நலகொண்டாவில் இருந்து ஜிடி மிட்டலாவுக்கு வந்துள்ளனர். சம்பவத்தன்று அஞ்சலி வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது நைசாக வீட்டுக்குள் புகுந்த இருவரும் அஞ்சலியின் முகத்தில் பெட்ஷீட்டை போர்த்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அஞ்சலி நிலைகுலைந்து தரையில் விழ அப்போது தான் சுத்தியலுடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார் மகள். பெற்ற தாய் என்றும் பாராமல் தாயின் தலையிலேயே சுத்தியலால் சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்திருக்கிறார். அஞ்சலி வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட அக்கம் பக்கத்தினர் என்னவோ நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெற்றிகரமாக கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்ட அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, தகவலறிந்து வந்த போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அஞ்சலி தெலுங்கானாவில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை சாக்கலி அயிலமாவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட கால முதல் புகழ்பெற்ற விளங்கிய ஒரு குடும்பத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 25, 2025 4:31 PM IST



.

Previous Post

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

Next Post

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In