Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பேன்ட் பாக்கெட்டுகளில் போன்; மடியில் லேப்டாப் வைத்தால்..? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பேன்ட் பாக்கெட்டுகளில் போன்; மடியில் லேப்டாப் வைத்தால்..? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பேன்ட் பாக்கெட்டுகளில் மொபைல் போன் வைத்திருப்பது, மடிக்கணினியை மடியில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆண்களிடையே விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என சமீபத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும் மின் சாதனங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் சில முக்கிய முடிவுகள் தெரிய வந்ததுள்ளன.

நீண்ட நேரம் மடிக்கணினிகளை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வதும் மொபைல் போன்களை ட்ரவுசர்/பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பதும் ஆண்மைக் குறைவுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மரபியல் ஆராய்ச்சி பிரிவு மற்றும் மருத்துவ நிறுவனம் 20 முதல் 40 வயதுக்குள்பட்ட 1,200 ஆண்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்தது. வாழ்க்கை முறை, பணியிட ஆபத்து, உணவுப் பழக்கம், போதை பழக்கங்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் பலர் தங்கள் பேன்ட்/ ட்ரவுசர் பாக்கெட்டுகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் போன்களை வைத்திருப்பதாகவோ அல்லது மடிக்கணினிகளை மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வேலை செய்வதாகவோ தரவுகள் காட்டுவதாக ஆய்வாளர் சுஜய் கோஷ் கூறினார்.

மேலும், “இந்த ஆய்வு மரபணு ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நபர்களில் குறிப்பாக 30 வயதுக்குள்பட்டவர்களில் கதிர்வீச்சினால் விந்தணு எண்ணிக்கை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரபணு பிரச்னை இல்லாதவர்களைவிட மரபணு ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், மேலும் மொபைல்போனை பாக்கெட்டுகளில் வைத்திருப்பதால், கருவுறாமையை 10 மடங்கு அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,200 பேரில் 708 பேருக்கு விந்தணு இல்லாத ‘அசூஸ்பெர்மியா’ நிலை இருந்தது. 640 பேர் ஆரோக்கியமான விந்தணுக்களைக் கொண்டிருந்தனர்.

மொபைல் போன் கதிர்வீச்சு, ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.

A recent study has found that keeping mobile phones in pants pockets and using a laptop on your lap for long periods of time can reduce sperm count in men.

இதையும் படிக்க | மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!



.

Previous Post

‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு | இந்தியா

Next Post

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: பணி நிரந்தரம் வழங்குவதில் சிக்கல் என்ன? – விளக்கும் வன்னி அரசு, சிபிஎம் ஜி.செல்வா, வழக்கறிஞர் மோகன், ஜெயராணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: பணி நிரந்தரம் வழங்குவதில் சிக்கல் என்ன? – விளக்கும் வன்னி அரசு, சிபிஎம் ஜி.செல்வா, வழக்கறிஞர் மோகன், ஜெயராணி

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: பணி நிரந்தரம் வழங்குவதில் சிக்கல் என்ன? - விளக்கும் வன்னி அரசு, சிபிஎம் ஜி.செல்வா, வழக்கறிஞர் மோகன், ஜெயராணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In