Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கும்பமேளா புனித நீரில் மனிதக் கழிவு.. தேசிய பசுமைத் தீர்ப்பாய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 18, 2025
in அரசியல் செய்திகள்
0
கும்பமேளா புனித நீரில் மனிதக் கழிவு.. தேசிய பசுமைத் தீர்ப்பாய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 18, 2025 12:43 PM IST

Kumbh Mela | கும்பமேளாவில் கங்கை நீரில் மனித, விலங்கு கழிவு அதிகம் கலந்ததால் குளிக்க உகந்ததல்ல என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது.

KumbhmelaKumbhmela
Kumbhmela

கும்பமேளாவில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவு அதிகளவில் கலந்திருப்பதாகவும், குளிப்பதற்குக் கூட உகந்தது அல்ல என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கங்கை மற்றும் யமுனை நதியில் கழிவுநீர் கலக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரயாக்ராஜில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வரும் கிருமிகள் அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

Also Read | கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது தவெக.. எந்த கட்சியுடன் தெரியுமா?

கங்கை நீரின் தரத்தை உறுதி செய்ய ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உத்தரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய தீர்ப்பாயம், இது தொடர்பாக நாளை காணொளி காட்சியில் ஆஜராகி விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

First Published :

February 18, 2025 12:20 PM IST



.

Previous Post

இந்தி படிக்கனுமா? அண்ணாமலை மகன் எந்த பள்ளியில் படிக்கிறார்? சீமான் சரமாரி கேள்வி!

Next Post

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In