Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை… கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2025
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை… கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 30, 2025 5:59 PM IST

மங்களூருவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்ட இளைஞர் அடித்து கொல்லப்பட்டார்.

News18News18
News18

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுமார் 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடி வந்தனர். இந்த போட்டியை ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தபோது, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். குறிப்பாக சச்சின் என்பவர் அவருடன் கடும் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து பலரும் ஒன்று கூடி அந்த இளைஞரை அடித்து புரட்டி எடுத்துள்ளனர். மேலும் அருகில் கிடந்த கட்டை உள்ளிட்டவற்றாலும் அந்த இளைஞரை மாறி மாறி அடித்துள்ளனர். பலத்த காயமடைந்த அந்த நபர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது முதுகில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால் உடலின் உள் பகுதியில் ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்குப் பின் தாக்குதலில் ஈடுபட்ட சச்சின் உட்பட 10க்கும் மேற்பட்டோரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபக்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

April 30, 2025 5:59 PM IST



.

Previous Post

நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains

Next Post

அக்னி தீா்த்த கடலில் கலக்கும் புதை சாக்கடை கழிவு நீா்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அக்னி தீா்த்த கடலில் கலக்கும்
புதை சாக்கடை கழிவு நீா்

அக்னி தீா்த்த கடலில் கலக்கும் புதை சாக்கடை கழிவு நீா்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In