Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்.. 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2025
in அரசியல் செய்திகள்
0
செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்.. 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 12, 2025 3:46 PM IST

ஆந்திராவில் ரங்கராயா மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்யாண் சக்கரவர்த்திகல்யாண் சக்கரவர்த்தி
கல்யாண் சக்கரவர்த்தி

ஆந்திராவில் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவிகள் 50 பேருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ரங்கராயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் பாரா மெடிக்கல் கல்லூரியும் இயங்கி வருகிறது. இதில், ஆந்திரா மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ மாணவிகள் 50 பேருக்கு ஆய்வக உதவியாளர் கல்யாண் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதில், ஆய்வகத்துக்கு வரும் மாணவிகள் சிலரை, அவர்களுக்கு தெரியாமலேயே தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், தவறினால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் எனவும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் ஆய்வக உதவியாளர் கல்யாண் சக்கரவர்த்தி அத்துமீறலில் ஈடுபட்டது அம்பலமானதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார், ஆய்வக உதவியாளர் கல்யாண சக்கரவர்த்தியை கைது செய்து செய்தனர். அவருக்கு உறுதுணையாக ஆய்வகத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஜிம்மி ராஜு, கோபாலகிருஷ்ணா மற்றும பிரசாத் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய நான்கு ஊழியர்களையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 12, 2025 3:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்.. 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!



.

Previous Post

விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

Next Post

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In