Last Updated:
பெங்களூரு மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட சொத்துவரி செலுத்தாதவர்களின் பட்டியலில், கர்நாடகா சட்டமன்றம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் சொத்துவரி செலுத்தத் தவறியதாகத் தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற கட்டடமான விதான் சவுதா, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 100 அரசு கட்டடங்கள் சொத்துவரி செலுத்தாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடக தலைநகரமான பெங்களூரு மாநகராட்சி அண்மையில் சொத்துவரி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் விதான் சவுதா, கர்நாடக ஆளுநர் மாளிகை மற்றும் 100க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் சொத்துவரி செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்டுள்ளது.
நூறு கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் வரியாக செலுத்தப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவை உலுக்கிய கொலை! பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்
கடந்த நவம்பர் மாதமே 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள சொத்துவரிகளை செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்று மண்டல ஆணையர்கள் மற்றும் சிறப்பு ஆணையர்களை நேரில் அனுப்பி நினைவூட்டியுள்ளதாகவும் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
March 04, 2025 5:52 PM IST

