Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2025
in அரசியல் செய்திகள்
0
அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம்.

செப்டம்பர் 3 – ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வரி வகைகள் இருந்தன. தற்போது இது 5 சதவிதம், 18 சதவிகிதம் என இரண்டு வரி வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது அமலானது செப்டம்பர் 22-ம் தேதி ஆகும்.

செப்டம்பர் 5 – கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘பிரதமர் மோடியை நண்பர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை பிரதமர் மோடியும் வழிமொழித்திருந்தார்.

GST 2.0
GST 2.0

செப்டம்பர் 15 – வழக்கமாக, ஜூலை 31-ம் தேதியே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொண்ட சில அப்டேட்டுகளால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசித் தேதி செப்டம்பர் 15-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, வருமான வரிக் கணக்குத் தாக்கல் வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடைசித் தேதி ஒரே ஒரு நாளுக்கு அதாவது செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது.

Trump Tariffs: “இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி” – ட்ரம்ப் உத்தரவும், இந்தியா மீதான பாதிப்பும்!

செப்டம்பர் 17 – அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது.

செப்டம்பர் 18 – அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது போல, அதானி குழுமத்தின் மீது எந்த தவறும் கிடையாது என்று செபி அறிக்கை வெளியிட்டிருந்தது.

செப்டம்பர் 19 – ட்ரம்ப் ‘கோல்டு கார்டு’ அறிமுகம் செய்தார். இந்தக் கார்டிற்குத் தனிநபருக்கு 1 மில்லியன் டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டது.

H-1B விசா - ட்ரம்ப் | இந்தியா, சீனா
H-1B விசா – ட்ரம்ப்

அதே நாளில், ஹெச் 1-பி விசா விலையை 1 லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) ட்ரம்ப் அரசு அதிகரித்தது. இது புதிதாக இந்த விசாவை விண்ணப்பிப்பவர்களுக்கு விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த விசாவை இதுவரை 66 சதவிகித இந்தியர்கள்தான் பெற்று வந்ததால், இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

செப்டம்பர் 22 – ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. குறைக்கப்பட்ட விவரங்கள் இதோ.

செப்டம்பர் 22 – அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ சந்தித்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடி இருக்கின்றனர்.

இந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரை, ‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும். இந்தியாவிற்கு இந்தியத் தேசம் மற்றும் மக்களின் நலன்தான் முக்கியம். இதில் பிற நாட்டின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது’ என்பதை அமெரிக்காவிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் பதில் கொடுத்தனர்.

அமெரிக்கா – இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக உள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல். இந்த மாதம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவிலிருந்தும் அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தனர்.

ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே’ சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம்



.

Previous Post

தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு! Old Pension Scheme

Next Post

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In