
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலஜியை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை – ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
“அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். அவர் மயங்கிய நிலையில் உள்ளார். அவரது பெயரை சொல்லி அழைத்த போதும் பதில் தரவில்லை. அவரது ஈசிஜி பரிசோதனை முடிவுகள் இயல்பு நிலையில் இல்லை. அவர் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

