Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளான ED வாதம்?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2024
in அரசியல் செய்திகள்
0
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளான ED வாதம்?!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை:

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு, ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தபோதிலும் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனப் பல்வேறு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அவரின் நீதிமன்றக் காவல் 49-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

ஒரு பக்கம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறு மதியத்துக்கு மேல் சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்கள் மருத்துவர்கள் கண்காணிப்பிலிருந்த செந்தில் பாலாஜி, செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் சிறைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணை:

கடந்த முறை ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த சமயத்தில், செந்தில் பாலாஜி தரப்பில், “உடல்நிலை சரியில்லாத நிலையில் சிறையில் இருக்கிறேன். அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் எப்போது வழக்கை விசாரித்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று காரசாரமாக விவாதத்தை முன்வைத்திருந்தனர். அடுத்ததாக வழக்கு விசாரணை ஜூலை 24-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி, “அமலாக்கத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிக்கிறார்கள். இதுவரை ஒன்பது முறை விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைச் சிறையில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறது. ஒரு பென்டிரைவ் கிடைத்திருப்பதாகவும், அதில் செந்தில் பாலாஜியின் பெயர் இருப்பதாகவும் சொல்கிறது” என்று வாதத்தை முன்வைத்தார்.

`பதிலைத்தான் கேட்கிறோம்!’

விசாரணையின்போது பேசிய அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அவரிடம் நீதிபதி, `இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரங்கள் என்ன?’ என்று கேட்க, அதற்கு செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் இருப்பதாக கூறினார்கள். அதற்கு நீதிபதி, “செந்தில் பாலாஜி தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்களே?” என்று கேட்டார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பு வக்கீல், “பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதை ஏற்க முடியாது” என்றார்கள்.

செந்தில் பாலாஜி

தொடர்ந்து பேசிய நீதிபதி, “கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் எங்கு இருக்கிறது என்று கேட்கிறோம். ஒரு சாதாரணமான கேள்வியைத்தான் முன்வைக்கிறோம். அதற்கு உங்கள் தரப்பு பதிலளிக்கவே இல்லை. சுற்றிவளைக்காமல் பதில் சொல்லுங்கள். இதற்குத் தடயவியல் நிபுணர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த பதிலைத்தான் நாங்கள் கேட்கிறோம். இன்று பதில் இல்லையென்றால், நாளை பதிலுடன் வாருங்கள். விசாரணையை நாளை ஒத்திவைக்கிறேன்” என்று நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்.

`ED திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!’

வழக்கு விசாரணை ஜூலை 25-ம் தேதி பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா நேற்று வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். இந்த நிலையில், அடுத்த வாரம் முழுவதும் லோக் அதாலத் வழக்கு விசாரணை இருக்கும் காரணத்தால் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை நீண்டுகொண்டே செல்லும் நிலையில், என்ன நடக்கிறது என்பது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்கள் அணியிலுள்ள சிலரிடம் பேசினோம்.

“நாங்கள் முன்பிருந்து தொடர்ந்து சொல்வதைப்போல அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதை நாங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறோம். இருந்தபோதிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டே குற்றச்சாட்டை மட்டும் முன்வைத்து வருகிறார்கள்.

அமலாக்கத்துறை

முதலில் `அமைச்சராக இருக்கிறார். வெளியே சென்று சாட்சியங்களைக் கலைத்துவிடக்கூடும்’ என்று சொல்லி ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்கள். இப்போது அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது பென்டிரைவில் அவர் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது என்று இல்லாத ஓர் ஆவணத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே இல்லை. அப்படி ஓர் ஆவணம் இருந்திருந்தால், அவர்கள் எப்போதோ சமர்ப்பித்திருப்பார்கள். இல்லாத ஆவணம் என்பதால் இப்போதுதான் தயார் செய்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறோம். அமலாக்கத்துறை தரப்பு வேண்டுமென்றே ஜாமீன் கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது. கண்டிப்பாக விரைவில் ஜாமீன் வாங்கி செந்தில் பாலாஜி வெளியே வருவார்” என்றார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை; இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்!

Next Post

பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி

பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In