மும்பை: அமெரிக்க சந்தை சரிவிலிருந்து மீண்டதாலும், புதிய அன்னிய நிதி முதலீடுகள் அதிகரிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 361.75 புள்ளிகள் உயர்ந்து 81,921.29 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் 637.01 புள்ளிகள் உயர்ந்து 82,196.55 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.70 புள்ளிகள் உயர்ந்து 25,041.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
