ஓ.பி.எஸ் முதல்வரைச் சந்தித்ததுகூட சம்பிரதாயமானது. அதற்கும் அரசியல் முடிச்சுப் போட்டுவிட்டீர்கள். அம்மா மீது இருக்கும் மரியாதையைப் போல எனக்கு மூப்பனார் மீதும் மரியாதை உண்டு.
அவர் நினைவு தினத்தன்று வாசனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தேன். அதன்பிறகுதான் யார், யார் வருகிறார்கள் என்பது தெரிந்தது. எனக்கு அதிமுக தலைவர்கள், தொண்டர்களுடன் எந்தக் கோபமோ, முரண்பாடுகளோ இல்லை.
எங்களுக்கு ஒரே ஒருவர் மீது மட்டும்தான் பிரச்னை. இதை அதிமுக தொண்டர்கள், பிற தலைவர்கள் உணர்வார்கள் எனக் கருதுகிறேன். அப்படி அவர்கள் உணர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க ஆட்சி அமைக்க முடியும்.

இப்போதுகூட நாங்கள் இதை வெளியே பேசுவதற்குக் காரணம், சில அவதூறுகளை ஊர் ஊராகச் சென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் மௌனமாக இருக்கக் கூடாது என்றே பேசுகிறோம்.
2026-ல் நிச்சயம் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். ஆனால் அந்த முடிவை டிசம்பர் மாதம்தான் தெரிவிப்போம். செங்கோட்டையன் எங்கள் ஸ்லீப்பர் செல் அல்ல.
ஒவ்வொரு தலைவருக்கும் அவர்கள் உணர்ந்துகொள்வதற்கான காலம் தேவைப்படும். இப்போது செங்கோட்டையன் உணர்ந்திருக்கிறார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு அவரிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்ட வேண்டும்” எனப் பேசினார்.
