Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2025
in அரசியல் செய்திகள்
0
`பிரபாகரன் உடனான போட்டோ எடிட்டிங் விவகாரம்' -செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரிக்குடிசை கிராமத்தில் ‘கள் விடுதலை மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

கவிஞர் அறிவுமதி சீமான் தமிழகத்தின் கருணா என விமர்சித்திருக்கிறாரே ?

“தமிழகத்தில் ஒரு கருணாதான். அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணா எனது விமர்சிப்பது ஏன் ? ஈழத்திற்கு உணவு, மருந்து பொருள்கள் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி. இது அறிவுமதி, சுபவீர பாண்டியன், கொளத்தூர் மணி ஆகியோர்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?

சீமான்
Seeman: ‘சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்…’ – கொளத்தூர் மணி சொல்வதென்ன?

ஈரோடு இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கிறது ?

“களம் எங்களுக்கானது. நான் ஒருவன்தான் போட்டியிடுகிறேன். ஆனால், பல அமைச்சர்களை களமிறக்கியும், கூட்டணி கட்சிகள் இருந்தும் வாக்குக்கு காசு கொடுப்பது ஏன் ? பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள் பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியார் தாலி அடிமை சின்னம் என்றும் அதனை அறுத்து எரியவேண்டும் என்றும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் என்றும் பேசியுள்ளார். பெண்கள் கருப்பையை அறுத்து எரிய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என்று கூறுவதைப் போன்றது என்று பெரியார் பேசியதைக் கூறி வாக்கு கேளுங்களேன்.

ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யார் ? ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு இருந்தவர்கள் யார் ? பாரதிய ஜனதா கட்சியின் தாய்க் கழகமான ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தவர் யார்? பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தவர்கள் யார்? திராவிடம் அதிகாரத்திற்கு போக, அரியணை ஏற பீகார் பார்ப்பனன் பிரசாந்த் கிஷோர் பாண்டே தேவைப்படுகிறார். இப்போது ராபின் சர்மாவை கூட்டி வந்திருக்கிறார்கள்.  அவர் ஒரு ஆரியர். நீங்கள் மேலே வருவதற்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. அவன் மூளை தேவைப்படுகிறது. ஆனால் எங்களை சங்கி எனது விமர்சனம் செய்கிறார்கள்”

சீமான்
பிரபாகரனுடன் சீமான்: “இதை எடிட் பண்ணிக் கொடுத்ததே நான் தான்..” -இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்!

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் தந்தை பெயரில் சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

“ஆரிய கூலி, ஆரியப் பற்று, ஆரியக் கூட்டாளி. அவர் நாடகம் போடும்போது முதல்வர் படமும், உதயநிதி ஸ்டாலின் படம் உள்ளது”

 ஐ.ஐ.டி இயக்குநர் கோமியம் குறித்து தெரிவித்த கருத்து குறித்து…?

“மருத்துவமனைகளுக்கு லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். பைத்தியங்களிடம் நாடும், மக்களும் சிக்கி உள்ளனர். மாட்டுப் பால் குடிப்பவன் இடை சாதி. மாட்டுக் கறி தின்பவன் கீழ் சாதி. மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான்”

சீமான்

நீங்கள் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறதே ?

“அதை விடுங்கள்….” என்றார்.



.

Previous Post

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

Next Post

இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In