இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி வைத்துள்ளார். சமீபத்தில் அவர் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் என்றைக்காவது போராடியதுண்டா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

