நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்” என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்’ என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்’ வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
