Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“உதயநிதி துணை முதல்வராகி என்ன செய்யப் போகிறார்?" – கேள்வி எழுப்பும் சீமான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2024
in அரசியல் செய்திகள்
0
“உதயநிதி துணை முதல்வராகி என்ன செய்யப் போகிறார்?" – கேள்வி எழுப்பும் சீமான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

சீமான்
Seeman: “உதயநிதி தெரிந்த கதைதான்; அடுத்து இன்பநிதி; இதுதான் கொடிய சனாதனம்” – சீமான் காட்டம்

இதற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தி.மு.க 100 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு இருக்குமா?. மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையை தவிர வேறு எதையையும் வைக்கவில்லை. வசனத்தையும், திரைக்கதையையும் மாற்ற வேண்டும். விஜய் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறேன். அதேபோல், முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திரு.வி.க உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும். பெத்தவன் ஒருத்தனாக இருக்க வேண்டும். தலைவன் எங்கள் இரத்ததில் இருக்க வேண்டும்.

என்னுடன் கூட்டணிக்கு யார் வருவார் போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை. விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் . பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கலை. ஆனால், பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து. ஆனால், இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம்.

பெரியார் திடலில் விஜய்
“பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” – உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

கட்சியிலிருந்து அவர்களாக போகிறார்கள் அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுபோன சறுகு கீழ் விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும். அதை பொருட்படுத்த வேண்டாம். தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பத்தாது. துணிவு வேண்டும். நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

விஜய் செய்தியாளர்களை சந்திக்கும் போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும். நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடும் பா.ஜ.க ஆதரவை விட்டு விலகினால் தி.மு.க 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்கும். உதயநிதி துணை முதலமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறார்?. அவருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா?. ஒரே உடையை ஒரு வாரம் உடுத்தி பள்ளிக்கு சென்று இருப்பாரா…உணவு கிடைக்காமல் பழைய சோறு கொண்டு இருப்பாரா?. உதயநிதி நடத்திய கால்பந்தயத்தில் உள்ளூர் நபர்கள் யாரேனும் பங்கேற்று வெற்றி பெற்றார்களா…ஒரு மாற்றுத்திறனாளிதான் தங்கப் பதக்கத்தை வென்று நமக்கு பெருமை சேர்க்க வேண்டியது. பானை ஒன்றுதான். ஆனால், வெளியே உள்ள தோற்றமும் உள்ளே உள்ள தோற்றமும் வேறு வேறு. நாங்கள் உள்ளே உள்ள தோற்றத்திற்காக பேசக்கூடியவர்கள்.

உதயநிதி ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆர்.எஸ்.பாரதியையும், டி.கே.எஸ்.இளங்கோவனையும் அனுப்புவதற்கு பதிலாக டி.ஆர்.பாலுவையும், ஜெகனையும் தான் அனுப்ப வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்றால், அவர்கள் அங்கு போய் என்ன பேசுவார்கள்… மதுவை ஒழிக்க வேண்டும் என்றா பேசுவார்கள்?. ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 – லும் தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு” என்றார்.

அதிஷியை முதல்வராக்கியது ஏன்… கெஜ்ரிவால் அரசியல் நகர்வின் பின்னணி என்ன?



.

Previous Post

MODI-யின் 3-வது ஆட்சியின் 100 நாள் வேதனையா… சாதனையா? Imperfect Show | Modi | Stalin

Next Post

“துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அலுவலருக்கு பதவி உயர்வா?" கொந்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அலுவலருக்கு பதவி உயர்வா?" கொந்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்..!

``துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அலுவலருக்கு பதவி உயர்வா?" கொந்தளிக்கும் தூத்துக்குடி மக்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In