நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில், கஸ்தூரி கைது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“இந்த கைது அவசியமற்றது. திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. கஸ்தூரி பேசியதால் காயம்பட்டதாக சொல்கிறார்கள். இதில் காயம்படவும் வேதனைபடவும் ஒன்றுமில்லை.
நூறு ஆண்டுகளாக தமிழ பேரினத்தை திராவிடர் எனக் கூறுவதால் நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம்? என் அடையாளத்தை மறைத்து என் இனத்துக்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்?
நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருக்கிறோம். ஆனால் இதெல்லாம் சிறையில் வைக்கும் அளவு பெரிய குற்றமா? என்பதுதான் என் கேள்வி.
