சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 – வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“வ.உ.சி கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.
வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால், அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா?.
