கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது, விழுப்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிடச் சென்றபோது சிலர் அவர்மீது சேற்றை வீசினர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினர் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைதுசெய்து கொண்டுபோவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து, அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப்புனிதரா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இது குறித்த அறிக்கையில் சீமான், “தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

