ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் குடியிருப்பு பகுதிக்குள் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக, பாதுகாப்பு படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், உள்ளூர் மக்களைக் கொண்டு கிராம பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இதற்காக, அவர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் தாங்கிரி கிராமத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
எனினும், பயங்கரவாதிகள் யாரும் அங்கு ஊடுருவவில்லை என்பதை பாதுகாப்புப் படையினர் பின் உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையே, அப்பகுதி முழுதும் ராணுவத்தினரும், போலீசாரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

