“அவர்கள் கிட்டத்தட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார்களே?”
“அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நிறைவேற்றி விட்டார்களா? இல்லை.
விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குவின்டால் நெல்லுக்கு ரூபாய் 2500 தருவதாக சொன்னார்கள். கரும்புக்கு நாலாயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். இதெல்லாம் அவர்களுடைய அறிக்கையில் இருக்கிறது. நிறைவேற்றி விட்டார்களா.
அப்புறம் எப்படி எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். சட்டமன்றமே ஆண்டுக்கு 100 நாள் நடத்த போவதாக சொன்னார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 நாட்கள் தான் நடந்திருக்கிறது. கேரளாவில் 65 நாட்கள் நடந்திருக்கிறது. 100 நாள் சட்டமன்றம் நடத்துவதாக அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் இப்போது சட்டமன்ற உறுப்பினர் வேலை வெட்டியே இல்லாமல் இருக்கிறார்கள். சட்டமன்றமே இல்லை சட்டமன்ற உறுப்பினர் ஊரிலேயே சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள். 15 நாள் தான் சட்டமன்றம் வருடத்திற்கு, ஆனால் சம்பளம் மாதம் மாதம் உண்டு. மற்றொரு எல்லாம் வேலை செய்யாமல் இருந்தால் சம்பளம் கொடுத்து விடுவார்களா. ஆனால் எம்எல்ஏக்களுக்கு 15 நாள் மட்டும் தான் வருடத்தில் சட்டமன்றம் ஆனால் மாதம் சம்பளம் இதெல்லாம் என்ன நியாயம்.
சட்டமன்றத்தை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் அவர்கள் சொன்ன அடிப்படையில் நடத்த வேண்டும் என்கிற ஒரு அக்கறை அவர்களுக்கு இல்லை.”
`திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பல பேர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்?”
“கூட்டணியில் மாற்றம் என்பதே கிடையாது. காவல்துறையின் அணுகு முறையில் உள்ள பிரச்னையை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். காவல்துறையினுடிய அணுகுமுறை மாறவில்லை என்றால் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும். சட்டத்திற்கு விரோதமான முறையில் காவல்துறையாக இருந்தாலும் ஆட்சியாளர்களாக இருந்தாலும்… நடந்து கொள்வது என்பது சரியில்லை. இன்றைக்கு பேப்பரில் பார்க்கும் பொழுது திமுக மேலேயே வழக்கு போட்டிருக்கிறார்கள். திமுக மேலே வழக்கு போடுவது என்பது செய்தி இல்லை. நாளைக்கு அவர்கள் அதனை வாபஸ் வாங்கிடுவார்கள். ஆனால் எங்கள் மேல் பல நூற்றுக்கணக்கான வழக்குகள் என்பது இருக்கிறது. இவங்க வந்த பிறகு என் மேல் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இவங்க ஆட்சிக்கு வந்த பிறகு நான் சொல்கிறேன். சமீபத்தில் திருவள்ளூரில் நான் போராட்டம் நடத்தினேன், கலெக்டர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையே முடிந்து போய்விட்டது. கோரிக்கை நிறைவேறி விட்டது. ஆனால் காவல்துறை வழக்கு போட்டிருக்கிறது. 135 பேர் மீது வழக்கு என்று எஸ்.பி செய்தி கொடுக்கிறார்.”

“காவல்துறை மந்திரிக்கு தெரிந்து செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா அல்லது காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?”
“இங்கே ஒரு சாதாரண குற்றவாளிகள் மீது வழக்கு போடும் பொழுது அவர்கள் வழக்கு போட்டு விடுவார்கள். எங்களை மாதிரி ஆள் மீது வழக்கு போடும் பொழுது, மேலே உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் உயர் மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் வழக்கு போடுவதற்கு வாய்ப்பில்லை. போட்டு வச்சுக்குவோம் நல்லது கெட்டதுக்கு உதவும் அப்படி என்கிற ஒரு அணுகுமுறையா தான் அது இருக்கிறது.”
முழுமையான பேட்டிக்கு…