கொலை செய்ய முயற்சி
ஜாமின் பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், “திமுக அரசு என் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு என்னை முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை முன்வைத்தோம். இது அப்பட்டமான பொய் வழக்கு. நான் வெளியிட்ட காணொலிகளில் 800க்கும் மேற்பட்ட காணொலிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவைதான். குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, நாங்குநேரி உள்ளிட்ட சாதிய பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றிருக்கிறேன்.
