கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக மலையரசன் போட்டியிடு உள்ளார் அதனையடுத்து அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் தேர்தலுக்கு 15 நாட்களே உள்ளதால் தொகுதி முழுக்க திமுகவினர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற அந்த வகையில் இன்று புகழ்பெற்ற தேவபாண்டலம் ஶ்ரீதுர்க்கை அம்மன் கோவிலில் திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கயர்கன்னி தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மலையரசன் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி நகர செயலாளர் தாகப்பிள்ளை தொழிலதிபர் ஆறுகதிரவன் ஒன்றிய கவுன்சிலர் வீரமணி வழக்கறிஞர் ரமேஷ் ஜி டி தயாளன் மாவட்ட துணை அமைப்பாளர் அஷிக்மற்றும் இம்தியாஸ் ராமச்சந்திரன் மற்றும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
