தமிழக அரசும், சேலம் மாநகராட்சியும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருமணிமுத்தாறில் புதன்கிழமை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘திடக்கழிவு மேலாண்மையை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது., அந்நிறுவனம் தங்களின் மாத சம்பளத்தை ₹ 11,600 லிருந்து ₹ 9,700 ஆக குறைத்துள்ளது. எங்களின் தினக்கூலியை ₹700 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று கூறினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் கூறினர்.
அதிகாரிகளின் அனுமதியின்றி தங்களை வேறு வார்டுகளுக்கு மாற்றியதாகவும் போராட்டக்காரர்கள் கூறினர். அவர்களின் மற்ற கோரிக்கைகலாவன, அனைத்து தற்காலிக ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்துதல், வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரியும் இரு மடங்கு ஊதியம் ஆகியவையாகும். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

