காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பித்ரோடா ராஜிநாமா செய்தார்.
சாம் பித்ரோடாவின் ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஆங்கில ஊடகத்துக்கு காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பித்ரோடா அளித்த நேர்காணலில், நாட்டில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்து நாடு முழுவதும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.
