Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதேபோல, உள்ளரங்குகளில் வேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் இந்தப் பட்டாசுகள் “நைட்ரோ செல்லுலோஸ்’ என்ற வகை வேதியியல் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசிலிருந்து சீறிக் கிளம்பும் தீப்பொறிகள் குறைந்த அளவு வெப்பத்தையே வெளியிடுகின்றன. எனவே, இந்தப் பொறிகளின் மீது குறிப்பிட்ட உயரத்தில் கை வைத்தால்கூட அதன் வெப்பம் தாக்குவதில்லை. இந்த கோல்டு பைரோ பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டவையாகும். இந்த வகை பட்டாசுகளை தயாரிக்க சீனாவிலிருந்து சட்ட விரோதமாக மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதேபோல, இந்திய சிறுவர்களிடையே அதிகம் விரும்பப்படும் தடை செய்யப்பட்ட “பாப் பாப்’ பட்டாசுகளிலும் “சில்வர் ஃபெஸிமெண்ட்’ என்ற வேதிப் பொருளை சிறு கல், துகள்களில் கலந்து உருண்டையாக்கி பளபளக்கும் காகிதத்தில் சுருட்டி தயாரிக்கின்றனர். இவற்றை தரையில் வீசி எறிந்தால் ஒலி எழுப்பும். இந்த வகை பட்டாசுகளை கிட்டங்கியில் சேமித்து வைத்தால் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலே வெடி விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவிக்கும்.

மேலும், தற்போது “மேச்சஸ் பாம்’ என்ற வகை பட்டாசு தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசு தீக்குச்சி போல இருக்கும். தீப்பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து ஒரு குச்சியை உரசி தரையில் போட்டால் அதிக ஒலியை எழுப்பும். இந்த வகை பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில்கூட வெடிக்கின்றனர் என்பது கவலையளிக்கக் கூடியதாகும்.

விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் “அடியாள் வெடி’ என்ற ஒரு வகை பட்டாசு தயாரிக்கப்படுகிறது. காகிதக் குழாயில் தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட் உள்ளிட்ட வேதியியல் பொருள்களைக் கொண்டு இந்த வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இது வழக்கமாகப் பயன்படுத்தும் லட்சுமி வெடியைவிட மூன்று மடங்கு ஒலியுடன் வெடிக்கும் ஆற்றல் கொண்டது.

தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்களில் தயாராகும் பாப் பாப், கோல்டு பைரோ உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு, இந்திய சந்தையில் விற்கப்படுவதால் சிவகாசியில் முறையாக தயாரிக்கப்படும் பல ரக பட்டாசுகள் விற்பனையில் சரிவைச் சந்தித்து வருகின்றன.



.

Previous Post

Caste Census History: இந்திய சமூக அரசியலை மாற்றியது எப்படி? | Decode

Next Post

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மீண்டும் விமர்சனம்? மறைமுகமாக பேசிய ஜெகதீப் தன்கர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மீண்டும் விமர்சனம்? மறைமுகமாக பேசிய ஜெகதீப் தன்கர்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மீண்டும் விமர்சனம்? மறைமுகமாக பேசிய ஜெகதீப் தன்கர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In