Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய கடற்படையை நினைத்து பெருமிதம்: கடற்கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட மாலுமிகள் உருக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய கடற்படையை நினைத்து பெருமிதம்: கடற்கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட மாலுமிகள் உருக்கம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி: சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் கடத்தல் சம்பவத்தை இந்திய கடற்படை அதிரடியாக செயல்பட்டு முறியடித்தனர். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

அரபிக்கடலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில், லைபீரியன் நாட்டு கொடியுடன் ‘எம்.வி.லிலா நோர்போல்க்’ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் (ஜன.,04)பயணித்தது. பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்ற கப்பலில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர். சோமாலியாவுக்கு கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்ற போது, அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டனர். நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பல் சென்ற திசைக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்தன. கடற்படை வீரர்களின் வருகையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றதால், கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகளும், ஆறு பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டு உள்ளது. நெட்டிசன்கள் இந்திய கடற்படைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மாலுமி ஒருவர் கூறுகையில், 24 மணி நேரமாக கப்பலில் சிக்கியிருந்தோம். இந்திய கடற்படை மீட்ட பிறகு தான் நிம்மதி அடைந்தோம் என்றார்.

மற்றொரு மாலுமி கூறுகையில், இந்திய கடற்படையை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

புதுடில்லி: சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் கடத்தல் சம்பவத்தை இந்திய கடற்படை அதிரடியாக செயல்பட்டு முறியடித்தனர். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

பெருங்குழப்பத்தில் தேர்தல் ஆணையம் – சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்கள் ரத்தாகுமா.?

Next Post

மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கரையில்லை!: காங்கிரஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கரையில்லை!: காங்கிரஸ்

மணிப்பூர் மீது மோடி அரசுக்கு அக்கரையில்லை!: காங்கிரஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In