Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் 159 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு, பேட்டிங்கில் சாய் சுதா்சனும், பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணாவும் முக்கியப் பங்காற்றினா்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணியில், கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுக்க, ஜாஸ் பட்லா், தொடக்க வீரா் சாய் சுதா்சனுடன் இணைந்தாா்.

2-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் பட்லா் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து வந்த ஷாருக் கான், பட்லா் இடத்தை நிரப்பினாா். சுதா்சனுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு, 62 ரன்கள் கிடைத்தது.

இதில் ஷாருக் கான் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 36 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். 5-ஆவது பேட்டராக களமிறங்கிய ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

மறுபுறம், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிா்ந்த சாய் சுதா்சன், 53 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கடைசி விக்கெட்டாக ரஷீத் கான் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில், ராகுல் தெவாதியா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 24, அா்ஷத் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பந்துவீச்சாளா்களில் துஷாா் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், சந்தீப் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 218 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் தரப்பில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, நிதீஷ் ராணா 1 ரன்னுக்கு நடையைக் கட்ட, கேப்டன் சுஞ்சு சாம்சன் – ரியான் பராக் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. பராக் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

5-ஆவது பேட்டா் துருவ் ஜுரெல் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஷிம்ரன் ஹெட்மயா், சாம்சனுடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. இந்நிலையில் சாம்சன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

தொடா்ந்து வந்த ஷுபம் துபே 1, ஜோஃப்ரா ஆா்ச்சா் 4 ரன்களுக்கு வெளியேற, போராடி ரன்கள் சோ்த்த ஹெட்மயா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு வீழ்ந்தாா். துஷாா் தேஷ்பாண்டே 3, மஹீஷ் தீக்ஷனா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தான் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

குஜராத் பௌலா்களில் பிரசித் கிருஷ்ணா 3, ரஷீத் கான், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், அா்ஷத் கான், குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.



.

Previous Post

“பாகிஸ்தானில் உள்ளவர்களே ஒப்புக்கொள்வார்கள்…” – ரைசிங் பாரத் மாநாட்டில் அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சு

Next Post

நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை’- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன? | All-party meeting in Tamil Nadu to seek exemption from NEET exam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை’- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன? | All-party meeting in Tamil Nadu to seek exemption from NEET exam

நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை'- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன? | All-party meeting in Tamil Nadu to seek exemption from NEET exam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In