ரஷ்யாவில் சரிந்து வரும் மக்கள்தொகையை உயர்த்த அந்த நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பணியிடங்களில் ஊழியர்கள் பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்தவும், முதல் முறையாக டேட்டிங் செல்பவட்களுக்கு உதவித்தொகை வழங்கவும் திட்டங்களை வகுத்தது ரஷ்ய அரசு.
ரஷ்ய ராணுவமும் பொருளாதாரமும் மக்கள் தொகையை சார்ந்தே இருப்பதனால் அரசு இந்த விஷயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கின்றது.
தற்போது Moskvich magazine என்ற ரஷ்ய வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, அதிகாரிகள் மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க “பாலுறவு அமைச்சகம்” “Ministry of Sex” என்ற தனித்த துறையை உருவாக்க ஆலோசித்து வருகின்றனர்.

மிரர் வலைத்தளம் அதிகாரிகளால் முன்மொழியப்பட்ட சில ஐடியாக்களைக் கூறியிருக்கிறது.
மக்களை இரவு 10 முதல் இணையதளத்தையும் விளக்குகளையும் அணைத்து வைக்க வலியுறுத்துவது, முதல்முறை டேட்டிங் செல்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபிள்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,302) வழங்குவது, புதுமணத் தம்பதியினருக்கான முதல் இரவு செலவை (26,300 ரூபிள்கள் வரை) அரசே ஏற்பது என பல யோசனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு சன்மானம் வழங்குவது போன்ற திட்டங்களையும் பரிசீலிக்கின்றனர். ரஷ்யாவின் சில மாகாணங்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தீவிர முயற்சிகளில் இறங்கிவிட்டனர்.
18 முதல் 23 வயதுக்கு உள்பட்ட பெண்கள் முதல் குழந்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளது கபரோவ்ஸ்க் மாகாண அரசு. செல்யாபின்ஸ்க் மாகாணத்தில் முதல் குழந்தைக்கு 9.2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ரஷ்யாவில் நாடும் முழுவதும் பெண்களின் குடும்பத் திட்டங்கள், மாதவிடாய் ஆரோக்கியம், பாலியல் நோக்கங்கள் உள்ளிட்ட விவரங்கள் தகவல்களாக திரட்டப்படுகின்றன. இதற்காக பெண்களுக்கு வழங்கும் கேள்விகளில் எப்போது பாலியல் ரீதியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்? கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பீர்களா? வரும் ஆண்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் இருக்கிறதா? போன்ற பர்சனலான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
நிறுவனங்கள் வழியாக வழங்கப்படும் இந்த கேள்விகளுக்கு பல பெண்கள் பதிலளிக்க விரும்பவில்லை என்றுக் கூறப்படுகிறது. அப்படி பதிலளிக்காத பெண்கள், மருத்துவரிடம் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க அழைக்கப்படுகின்றனர்.

ரஷ்யாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழும் ‘சுதந்திரமான வாழ்க்கை முறையை’ பரப்பும் ஆன்லைன் கண்டண்ட் கிரியேட்டர்கள் மற்றும் மீடியாக்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசினஸ் இன்சைடர் வலைத்தளம் தெரிவிக்கிறது.
ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் எப்போதும் இல்லாத வகையில் வீழ்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 98,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். மாதாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை விடக் குறைவது இதுவே முதன்முறை.
ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் பல வீரர்களை இழந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக போர் தொடர்வதால் குழந்தை பெற்றுக்கொள்ள மக்கள் அஞ்சுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

