Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் சமூகவலைதளத்தில் பரவும் வதந்திகள் பெரும் சவாலாக உள்ளன. சமூகவலைதள வதந்திகளை கண்காணித்து மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, மக்களின்

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம். ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருள்களை ஒழிப்பது! இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்! இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிகிடக்கிறது.

போதைப் பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில், ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்தக் குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரியது. இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்.

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள்ளே நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது. தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம், தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும்.

இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் சைபர் அடிமைத்தனம் பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாவும், உடல்ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும்

.

Previous Post

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? – அதிகாரிகள் கூறுவது என்ன?

Next Post

இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!

இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😝😝😝😝😝😝😝😝😝🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥴😎😎😎😎😎😎

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In