நடிகை ருக்மணி வசந்த் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ – சைட் ஏ’, ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.