வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சைபர் குற்றங்களில் இந்த ஆண்டில் ரூ.707 கோடியை மக்கள் இழந்துள்ளனர். ஆனால் ரூ.7.29 கோடியை மட்டும் போலீசார் மீட்டு உள்ளனர்.
இது தொடர்பாக டிஜிபி ரவி குப்தா கூறியதாவது: ஆண்டுதோறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை மருந்து பிரச்னைக்கு பிறகு, இந்த குற்றங்கள் தான் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்காக சைபர் குற்றப்பிரிவை வலுப்படுத்தி வருகிறோம்.
இந்தாண்டு சைபர் கிரைம் பிரிவுக்கு 85,030 புகார்கள் வந்தன. இதில், 65,877 பணம் தொடர்பானவை. சைபர் குற்றங்களில் மக்கள் ரூ.707 கோடி பணம் இழந்துள்ளனர். ரூ.7 கோடி பணத்தை போலீசார் மீட்டு உள்ளனர். இவை மக்களிடம் படிப்படியாக வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


