Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிக்கிய ரூ.4.8 கோடி ரொக்கம்… இங்கே நயினார், அங்கே சுதாகர்… கர்நாடகா பாஜகவிற்கு பெரிய தலைவலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2024
in Default
1
சிக்கிய ரூ.4.8 கோடி ரொக்கம்… இங்கே நயினார், அங்கே சுதாகர்… கர்நாடகா பாஜகவிற்கு பெரிய தலைவலி!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிக்கபல்லபூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுபவர் கே.சுதாகர். இந்த தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

நேற்றைய தினம் சிக்கபல்லபூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 4.8 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இந்த பணம் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுபற்றி விசாரிக்கையில் பாஜக வேட்பாளர் கே.சுதாகருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளது.

சிக்கபல்லபூர் தொகுதியில் பரபரப்பு

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், அந்த பணம் தன்னுடையது அல்ல என்று கூறி வருகிறார். இதேபோல் சிக்கபல்லபூர் பாஜக வேட்பாளர் கே.சுதாகருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. அவரது பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யார் இந்த கே.சுதாகர்?

இவரது சொந்த ஊர் சிக்கபல்லபூர். முதலில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் பாஜகவிலும் இணைந்தார். 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து நிலையில் நடந்த இடைத்தேர்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.

2023 சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கபல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. விரைவாக செயல் திட்டங்கள் உருவாக்கி களப் பணிகளை முடுக்கி விட்டார்.

ஆபரேஷன் கமலா

2019ஆம் ஆண்டு நடந்த ஆபரேஷன் கமலாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு தாவினர். அதில் கே.சுதாகரும் ஒருவர். இந்த ஆபரேஷனால் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

Previous Post

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சூரத் லோக்சபா வேட்பாளர் நிலேஷ் கும்பானி காங்கிரசிலிருந்து நீக்கம்.

Next Post

மோடி பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடி பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

மோடி பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In