Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.150 கோடி மோசடி… “மணி ஹீஸ்ட்” பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2025
in அரசியல் செய்திகள்
0
ரூ.150 கோடி மோசடி… “மணி ஹீஸ்ட்” பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 08, 2025 6:56 PM IST

முதலில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையைப் பெறுவார்கள், பின்னர் பெரிய தொகைகள் வந்தவுடன் அக்கவுன்ட்களை பிளாக் செய்வார்கள். பணம் எடுக்க முயற்சிப்பவர்களை மிரட்டி, மேலும் டெபாசிட் செய்ய வற்புறுத்துவார்கள். இந்த வழியில், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றினர்.

News18
News18

பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடரான “மணி ஹீஸ்ட்” என்ற வெப் சீரிஸ்-ஐ பின்பற்றி டெல்லியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அதைப் பின்பற்றி நாடு முழுவதும் ரூ.150 கோடி மோசடி செய்துள்ளனர்.

மணி ஹீஸ்ட் தொடரின் கதாபாத்திரங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஆன்லைன் மோசடி மூலம் கூடுதலாக ரூ.23 கோடியை மோசடி செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளிகளான அர்பித், பிரபாத் மற்றும் அப்பாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த நபர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றினர். காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட போலி பெயர்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

வழக்கறிஞர் அர்பித் பேராசிரியராகவும், கணினி அறிவியல் பட்டதாரி பிரபாத் வாஜ்பாய் அமண்டாவாகவும், அப்பாஸ் ஃப்ரெடியாகவும் தங்கள் உண்மையான பெயரை மாற்றிக் கொண்டனர். அவர் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பல ரகசிய குழுக்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து மக்களை கவர்ந்து, முதலீடு செய்ய தூண்டினார்.

அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் டஜன் கணக்கான குழுக்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் ஆலோசனைகளையும், குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தங்கள் மூலம் முதலீடு செய்தால் சிறந்த வருமானம் கிடைக்கும் என்று மக்களிடம் உறுதியளித்தனர்.

முதலில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையைப் பெறுவார்கள், பின்னர் பெரிய தொகைகள் வந்தவுடன் அக்கவுன்ட்களை பிளாக் செய்வார்கள். பணம் எடுக்க முயற்சிப்பவர்களை மிரட்டி, மேலும் டெபாசிட் செய்ய வற்புறுத்துவார்கள். இந்த வழியில், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றினர். இந்தக் கும்பல் சொகுசு ஹோட்டல்களில் தங்கி, அங்கிருந்து தங்கள் போன்கள் மற்றும் லேப்டாப்களை மட்டுமே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​நொய்டா மற்றும் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் 11 போன்கள், 17 சிம் கார்டுகள், 12 பாஸ்புக்குகள்-செக் புக்குகள், 32 டெபிட் கார்டுகள் மற்றும் ஏராளமான ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன்கள் மற்றும் வாட்ஸ்அப் சேட்களின் ஸ்கிரீன் ஷாட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரிவர்த்தனைகள், கால் ரெக்கார்டுகள் மற்றும் இன்டர்நெட் லாக்குகளை ஆராய்ந்த பிறகு, சில சீன சந்தேக நபர்களும் மோசடியில் ஈடுபட்டிருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். இதே கும்பல் பல்வேறு ஆன்லைன் முறைகள் மூலம் மேலும் ரூ.23 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்த வழக்கில் சீனாவில் இருந்து செயல்படும் சைபர் மோசடி நெட்வொர்க்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மற்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைத் தேடி வருகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 08, 2025 6:56 PM IST



.

Previous Post

“சடலமாக மீட்கப்பட்ட விஏஓ… இதுதான் சட்ட ஒழுங்கா?” – எடப்பாடி பழனிசாமி காட்டம் | “VAO recovered as a corpse… Is this the law and order?” – Edappadi Palaniswami questions

Next Post

சாலையில் கிடந்த VVPAT; “இந்தத் தவறுக்கு காரணமானவர்களை” – தேர்தல் ஆணையம் விளக்கம் | VVPAT lying on the road; “Those responsible for this mistake” – Election Commission explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலையில் கிடந்த VVPAT; “இந்தத் தவறுக்கு காரணமானவர்களை” – தேர்தல் ஆணையம் விளக்கம் | VVPAT lying on the road; “Those responsible for this mistake” – Election Commission explains

சாலையில் கிடந்த VVPAT; ``இந்தத் தவறுக்கு காரணமானவர்களை" - தேர்தல் ஆணையம் விளக்கம் | VVPAT lying on the road; ``Those responsible for this mistake'' - Election Commission explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In