Thursday, September 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருவொற்றியூர் கடற்கரையில் ரவுடி கொலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
திருவொற்றியூர் கடற்கரையில் ரவுடி கொலை
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: திருவொற்றியூர் கடற்கரையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (22). இவர் மீது மணலி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள இளையவாணன் என்ற நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். இருவரும் பட்டினத்தார் கோயில் தெரு அருகில் கடற்கரையில் அமர்ந்திருந்துள்ளனர்.

இரவு 10 மணி அளவில் அந்தப் பகுதிக்கு சென்ற திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த அபினேஷ் (20), சுனில் (22) ஆகியோரை ஜோதீஸ்வரன் கிண்டல் செய்து வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் அங்கிருந்து கோபத்துடன் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில்ஜோதீஸ்வரன் மது போதையில் கடற்கரையில் படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர் இளையவாணன் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், தங்களிடம் வம்பு இழுத்த ஜோதீஸ்வரன் கடற்கரையில் படுத்திருந்ததை அறிந்த அபினேஷ் மற்றும் சுனில் இருவரும் அரிவாளுடன் சென்று ஜோதீஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஜோதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவல்அறிந்து திருவொற்றியூர் போலீஸார்நிகழ்விடம் விரைந்து ஜோதீஸ்வரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவான அபினேஷ், சுனில் ஆகிய இருவரையும் தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: கடறகரயலகலதரவறறயரரவட
Previous Post

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Next Post

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

Comments 1

  1. ராஜாலிங்கம் சென்னை says:
    3 years ago

    செய்தி முழுமையாக இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In