இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் இதற்காக ஒரு முயற்சியை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள வுஹான் நகரப் பள்ளிகளில் மாணவர்களின் மேசைகளில் “ரோலர் கோஸ்டர்’ போன்ற தோற்றமளிக்கும் உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
squint-free என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளின் அமரும் தோரணையை சரிசெய்வதும், ஆரோக்கியமான வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுமாகும்.
