Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 17, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினையும் இந்தியா இழந்தது. பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் இருக்கிறது: கருண் நாயர்

பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரும் தொடங்கவுள்ளது.

View this post on Instagram

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

இதையும் படிக்க: டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.





.

Previous Post

கவர்ச்சியான பாஜகவின் டெல்லி வாக்குறுதிகள்

Next Post

ஈரோடு கிழக்கு `சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்’- பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு கோரிக்கை | erode east by election petition against seeman

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரோடு கிழக்கு `சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்’- பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு கோரிக்கை | erode east by election petition against seeman

ஈரோடு கிழக்கு `சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்'- பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு கோரிக்கை | erode east by election petition against seeman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In