Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு “மிக்-21′ போர் விமானங்களுக்கு ஓய்வு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு “மிக்-21′ போர் விமானங்களுக்கு ஓய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான “மிக்-21′ போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.

இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் விமானமும் மிக்-21 அளவுக்கு நீண்ட காலம் சேவையில் இருந்ததில்லை. கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக மிக்-21 விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இந்தியாவின் போர் திறனை மேம்படுத்த 870-க்கும் மேற்பட்ட மிக்-21 ரக விமானங்கள் வாங்கப்பட்டன.

1965, 1971-ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் மிக்-21 விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

எனினும், மிக்-21 விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் காரணத்தால், அவை “பறக்கும் சவப்பெட்டி’ என்ற அவப்பெயரையும் ஈட்டியது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் சில பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

“பாந்தர்ஸ்’ என்றழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆம் படைப்பிரிவின் வசமுள்ள இறுதி மிக்-21 விமானங்களுக்கு சண்டீகர் விமானப்படை தளத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி பிரியாவிடை அளிக்கப்படுகிறது. மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “தேஜஸ்’ இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.



.

Previous Post

“சம்பாதித்து சாப்பிடுங்க..” – ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

Next Post

அடுத்தடுத்து நடந்த அந்த 3 சம்பவம்… ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? – காரணம் இதுதானா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்தடுத்து நடந்த அந்த 3 சம்பவம்... ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? - காரணம் இதுதானா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In