ஜெருசலேம்: இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.
நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும், பகல் நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
நுஜெய்ரத் அருகே இருவேறு இடங்களிலிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
