Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கும்பமேளாவுக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கி 10 பேர் பலி: குடியரசுத தலைவர் இரங்கல்

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
கும்பமேளாவுக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கி 10 பேர் பலி: குடியரசுத தலைவர் இரங்கல்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் கார் பேருந்து மீது மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுதலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர். ​​அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பான குடியரசுத்தலைவரின் சமுக வலைதள பதிவில்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

Previous Post

தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்..! – பா.ரஞ்சித் கடும் தாக்கு..

Next Post

ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!!

ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In