Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 15, 2025
in Default
0
ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!!
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரமடைந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், ஆயிரம் ஏக்கர் நிலம் ஆகியவற்றை கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் வெள்ளி வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நில பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச்.வி.மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பீட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்தனர். நேற்று காலை 11.30 மணிக்கு ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. பகல் 1.45 மணி வரை 157 ஆபரணங்கள் மதிப்பீடு செய்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின் பகல் 3.05 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. மாலை 5.45 மணி வரை ஆபரணங்கள் மதிப்பீடு செய்து 296 பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு சொந்தமான வாகனத்தில் மீண்டும் ஆபரணங்கள் அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெயலலிதா நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நேற்று 6 மணி நேரமாக நடைபெற்றது. இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரமடைந்துள்ளது. அனைத்து நகைகளும் மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது.

Previous Post

கும்பமேளாவுக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கி 10 பேர் பலி: குடியரசுத தலைவர் இரங்கல்

Next Post

இருவர் கொலை! தொடர்புடைய 3 பேரின் வீடுகள் சூறை!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
இருவர் கொலை! தொடர்புடைய 3 பேரின் வீடுகள் சூறை!

இருவர் கொலை! தொடர்புடைய 3 பேரின் வீடுகள் சூறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In