Last Updated:
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் அவர், உடல்நலக் காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க விவகாரத்தில் மத்திய அரசுடன் ஜெகதீப் தன்கருக்கு எழுந்த மோதல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், குடியரசு தலைவருக்கு ஜெகதீப் தன்கர் அனுப்பியிருந்த ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
மேலும் நாட்டிற்கு சேவை செய்ய குடியரசு துணை தலைவர் பதவி உள்ளிட்ட பல வாய்ப்புகள் ஜெகதீப் தன்கர் கிடைத்ததாகவும், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
July 22, 2025 1:02 PM IST

