மதுரை மத்திய சிறையில் 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மதுரை சரக சிறை துறை டிஐஜி திரு. பழனி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை பறக்க விட்டு சிறைவாசிகளிடம் உரையாடினார் சிறைவாசிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
மதுரை மத்திய சிறை சிறைவாசிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு 36 வது பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மத்திய சிறையைச் சார்ந்த ஒருவர் முதுகலை பட்டப்படிப்பும் . ஐந்து தண்டனை சிறைவாசிகள் பி ஏ இளங்கலை பட்டப்படிப்பும் . பெண்கள் தனிச்சிறையில் நான்கு சிறைவாசிகள் மற்றும் மத்திய சிறை மதுரையில் நான்கு தண்டனை சிறைவாசிகள்
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாடப்பிரிவுகளில் பட்டய தேர்ச்சியும் பெற்றனர்.
இவர்களுக்கு பட்டம் மற்றும் பட்டயச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மதுரை மண்டல இயக்குனர் திரு. சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறைத்துறை மதுரை சரக டிஐஜி திரு. பழனி அவர்கள் தலைமையில் மதுரை சிறை எஸ்பி திரு. சதீஷ்குமார் முன்னிலையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் சிறை அலுவலர், மருத்துவ அதிகாரிகள், சிறை பணியாளர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.



